Saturday, January 11, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 11

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.
அருணாச்சலம் - 1997

நான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் திருவாரூர் தைலம்மையில் வெளியான படம் அருணாச்சலம். பாடல்கள் எல்லாம் அசத்தல் ரகம். உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி என்று காமெடி ஜானரில் சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த சுந்தர்.சி இயக்கியதுடன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜியினிடம் கேள்வி கேட்கும் பத்திரிகையாளராகவும் ஒரு காட்சியில் நடித்திருப்பார்.

இந்தப்படத்தையும் 30 கோடி ரூபாயை 30 நாளில் ஒரு பைசா, ஒரு சொத்து என்று எதுவும் மீதம் இல்லாமல் செலவழிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நடக்கும் கதையை காமெடி ஜானரில்தான் எடுத்திருந்தார்கள்.
courtesy: rajinifans.com
தன்னுடன் திரைத்துறையில் பணியாற்றி, தற்போது நலிவுற்றிருக்கும் கலைர்களுக்கு உதவும் விதமாக அருணாச்சலா சினி கம்பைன்ஸ் என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்து, இந்த படத்தை தயாரித்து வெளியிட்டார் ரஜினிகாந்த்.
courtesy: rajinifans.com
தன்னைச் சார்ந்திருந்தவர்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தை பலருக்கும் உருவாக்கிய செயல் என்று இதனை சொல்லலாம்.

அது தவிர அரசியல் பிரச்சாரம் உள்ளிட்ட சில காரணங்களால் மனோரமா அவர்கள் தனிப்பட்ட முறையில் ரஜினியை தாக்கிப் பேசியதால் திரைத்துறையினர் தானாகவே வாய்ப்புக்களை குறைத்து விட்டதாக கூறப்பட்டது.

மனோரமா பேசியதை மனதில் வைத்துக் கொள்ளாமல், அருணாச்சலம் படத்தில் நடிக்க வைத்தார். இதன் மூலம் திரைத்துறையில் மீண்டும் மனோரமா நிறைய படங்களில் அதிகமாக நடிக்கத் தொடங்கினார்.
courtesy: Arunachala Cinecombines & Super Star Rajinikanth
***
அருணாச்சலம்
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment