Wednesday, January 15, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 15

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.

சிவாஜி - 2007
இந்தப்படமும் திருவாரூர் தைலம்மையில்தான் திரையிடப்பட்டது. நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் படம் பார்த்ததில் இருந்து இருந்தே நான் ஷங்கரின் படங்களை விரும்பி பார்ப்பேன்.
courtesy: Sivaji Movie & Unit
Tiruvarur Thailammai Theatre

சந்திரமுகி படம் ரிலீசான சில மாதங்கள் கழித்து உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது ரஜினி படத்தை ஷங்கர் இயக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற பேச்சு வந்தது.
courtesy:
rajinifans.com
ரஜினியைப் பொறுத்தவரை மூன்று மாதங்களில் முழு படப்பிடிப்புமே முடிந்து விடும். ஷங்கர் வருடக்கணக்கில் இழுப்பார். அது தவிர பட்ஜெட் மிகப்பெரியதாக தேவைப்படும். ஏவிஎம், சன்டிவி போன்ற பெரிய நிறுவனங்களால்தான் முடியும் (அந்த காலகட்டத்தில் லைகா தமிழ் திரைப்படங்கள் தயாரித்ததா என்று தெரியவில்லை.) என்று பேசிக்கொண்டிருந்தோம்.

கொஞ்ச நாளிலேயே ஏவிஎம், ரஜினி, ஷங்கர், ஏஆர் ரஹ்மான், கே.வி ஆனந்த் என்று மெகா கூட்டணியில் இந்த படம் அறிவிக்கப்பட்டது.
courtesy:
rajinifans.com
சென்னை பூந்தமல்லி சாலையில் பச்சையப்பா கல்லூரிக்கு எதிர்திசையில் இருந்த தனியார் பள்ளியில் ஒரு சில ஆண்டுகள் புத்தக கண்காட்சி நடைபெற்றது.

அந்த ஏரியாவிலேயே நான் ரூமில் தங்கியிருந்ததால் 2007ஆம் ஆண்டு புத்தக கண்காட்சிக்கு நாலைந்து நாட்கள் நான் தங்கியிருந்த இடத்திலிருந்து நடந்தே சென்றேன். அந்த பள்ளிக்கூடத்தில் சிவாஜி படத்திற்காக, ரஜினியை கைது செய்து கோர்ட்டுக்கு அழைத்து வரும் காட்சியை படமாக்கினார்கள்.

பொதுவாக ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதால் வெளி மாநிலங்களில்தான் ரஜினியின் படப்பிடிப்பு நடைபெறும்.
courtesy: rajinifans.com
சென்னையின் மையப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது ரஜினி ரசிகர்கள் பலருக்கும் உற்சாகம் தந்தது என்பதை எல்லாரும் பார்க்க முடிந்தது.

படத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்கு சிக்கலை உண்டாக்கும் கருப்பு பணம் பற்றி சீரியசாக இந்த படம் பேசினாலும், வாங்க பழகலாம், லிவிங்ஸ்டன் லகலக என்று கைவிலங்குடன் வருவது என்று ஜாலியாக பல காட்சிகளை வைத்து உருவான படம்.
courtesy: AVM Productions
Superstar Rajinikanth
Director Shankar
rajinifans.com
‘வௌ்ளையா இருந்தா அழுக்காயிடுவன்னுதான் கருப்பா பெத்தேன்’ என்ற வசனம் டிரெய்லர்களில் இடம்பெற்று அப்போதே அனைவரையும் சிரிக்க வைத்தது.

ஒரு கூடை சன்லைட் பாடலில் மோஷன் கேப்சர் முறையில் ஒரு ஆண்டு பல கம்ப்யூட்டர் வல்லுனர்கள் உழைத்து வௌ்ளைக்காரர் தோற்றத்தில் ரஜினியை மாற்றியது அப்போது மிகவும் பேசப்பட்ட காட்சி.

சுமன் போனில் பேசும்போது, ‘யாருடா நீ...?’ என்று கேட்பார். அதற்கு ரஜினி ‘பராசக்தி ஹீரோடா...’ என்று சொன்னதுமே ‘சிவாஜி?’ என்று மெல்லிய குரலில் சுமன் கேட்கும் காட்சியில் தியேட்டர்கள் அதிர்ந்தன.

அதேபோல் மொட்டைத்தலை கெட்டப் ரஜினி தன்னுடைய தலையில் தபேலா வாசித்துக்கொண்டு ‘ச்சும்மா அதிருதில்ல...’ என்று கேட்கும் வசனமும் பிரபலம்.
***
சிவாஜி
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment