Thursday, January 16, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 16

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.

குசேலன் - 2008

இந்த படம் சோழா தியேட்டரில் வெளியானது. பட பூஜையின்போதே, இந்த கதை பிடித்ததால்தான் நான் விரும்பி நடிக்கிறேன். சிறப்புத்தோற்றம்தான். படத்தின் நாயகன் பசுபதிதான் என்று ரஜினியே சொல்லிவிட்டார்.


courtesy: Superstar Rajinikanth, Kavithalayaa, 
Story Writer : Srinivasan

courtesy: Kuselan Movie & Unit
Tiruvarur Chola Theatre

courtesy: Superstar Rajinikanth, Kavithalayaa,
Story Writer : Srinivasan
அப்படி இருந்தும் சிலர் தலைவர் படம் நாங்க எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சொன்ன சம்பவமும் நடைபெற்றது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி மட்டும் கண்கலங்கவில்லை. பார்க்கும் ரசிகர்களையும் கண்கலங்கச் செய்து இருப்பார். எனக்கு பிடித்த காட்சிகளில் குசேலன் படத்தின் கிளைமாக்சில் ரஜினி பள்ளியில் பேசும் காட்சிக்கும் இடம் உண்டு.
***
குசேலன்
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment