Friday, January 17, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 17

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.

எந்திரன் - 2010
திருவாரூரில் அண்ணாமலை படம் 1992ம் ஆண்டு நடேஷ் தியேட்டரில் வெளியான பிறகு 2005ல் சந்திரமுகி ஷிப்டிங் முறையில் சுமார் ஒரு மாதம் ஓடியது. அப்படிப் பார்த்தால் 1992க்கு பிறகு நேரடியாக 18 ஆண்டுகளுக்கு பிறகுதான் ரஜினி படம் திருவாரூர் நடேஷ் தியேட்டரில் ரிலீஸ். அத்துடன் சோழா தியேட்டரிலும் திரையிடப்பட்டது.


சுஜாதாவின் என் இனிய இயந்திரா நாவலின் பாதிப்பால் கமல்ஹாசனே ரோபோ என்ற பெயரில் நடிக்க ஆசைப்பட்ட அவுட்லைன் கதை என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

courtesy: Chola Theatre, Tiruvarur
முழுவதும் தொழில்நுட்பம் சார்ந்த கதையில் ரஜினி. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு டெக்னிக்கலாக மிரட்டியிருந்தார்கள்.
courtesy: Superstar Rajinikanth
&
Sun pictures
&
Natesh theatre, Tiruvarur
நாம் சாதாரணமாக மெஷின்தானே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, அந்த இயந்திரம் சிந்திக்கத் தொடங்கினால் என்ன ஆகும் என்ற கதைதான் எந்திரன்.

நாலு பாட்டு, அஞ்சு பைட்டு என்று பல ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்சினிமா பார்முலாவில் இருந்து விலகி அன்றைய சூழ்நிலைக்கு தக்கவாறு திரைக்கதை அமைக்கப்பட்டு உருவான படம்.

அதிலும் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சிட்டி ரோபோ தன்னைத் தானே கழற்றி அழித்துக்கொள்ளும் காட்சி இரும்பிலே ஒரு இதயம் என்ற பாடல் வரிகளை நினைவூட்டும் வகையில் இரும்பு இதயத்துக்காக ரசிகர்களை கண் கலங்க வைத்தது.
***
எந்திரன்
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment