Saturday, January 18, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 18

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.

கோச்சடையான் - 1992
இந்தப்படம் திருவாரூர் நடேஷ் தியேட்டரில் திரையிடப்பட்டது.

எந்திரன் படத்துக்குப் பிறகு ரஜினி நடித்த படங்கள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வராமல் இருந்த நிலையில் ரசிகர்களின் ஆவலை கொஞ்சமாவது பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக வந்தது கோச்சடையான் அனிமேஷன் படம்.
courtesy: Kochadaiyan movie & Unit
Natesh Theatre, Thiruvaur
நடிகர் ரஜினி காந்த், சினிமாதுறையில் சிறப்பாக சேவையாற்றியதற்காக மத்திய அரசு அவருக்குஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளிஎன்கிற பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது. அப்போது அவர் என்ன சாதித்து விட்டார், எதற்காக இந்த விருது என்று கேள்வி எழுப்பியவர்கள் ஏராளம்.
கருப்பு வெள்ளை படத்தில் அறிமுகமான ரஜினி, வண்ணப்படம், சினிமாஸ்கோப், டிஜிட்டல் சினிமா, 3டி, மோஷன் கேப்சர் முறையில் அனிமேஷன் என்று அத்தனை பரிணாமங்களில் சினிமா தொழில்நுட்பம் மாறியிருந்தாலும் எல்லா வடிவ சினிமாக்களிலும் நடித்திருக்கிறார் என்பதும் ஒரு சாதனையாக சொல்லப்பட்டது.

இதையும் சிலர் ஏற்காமல், இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது பலருடைய கூட்டு முயற்சி. இதில் ரஜினியின் பங்கு என்ன என்று கேட்டார்கள்.

கருப்பு வெள்ளையாக இருந்த சினிமா இன்று மோஷன்கேப்சர் தொழில்நுட்ப அனிமேஷன் என்று வளர்ந்திருப்பது தொழில்நுட்ப முன்னேற்றம்தான். அதை மறுக்கவில்லை.

ஆனால் எல்லா காலகட்டத்திலும் கதாநாயகன் அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர்கள் என்று தமிழைப் பொறுத்தவரை ரஜினியைத் தவிர வேறு யாரையும் கை காட்ட முடியாது.
இப்போது வரை கதாநாயகனாக தாக்குப்பிடித்து, இன்றும் வசூல்மன்னனாக இருப்பது ரஜினி என்ற நடிகர் மக்கள் மனதில் ஆழப்பதிந்திருப்பதால்தான் என்ற உண்மையையும் யாராலும் மறுக்க முடியாது.
***
கோச்சடையான்
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment