Sunday, January 19, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 19

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.

லிங்கா - 2014

இந்தப்படமும் திருவாரூர் நடேஷ் தியேட்டரில்தான் வெளியிடப்பட்டது.


ரஜினியின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு எந்திரன் 2ம் பாகம் வெளிவருவதற்கு முன்பு ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஜாலியான படம் ஒன்றை குறுகிய கால தயாரிப்பாக வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்த உடனேயே கே.எஸ்.ரவிகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.
courtesy:
Superstar Rajinikanth & K.S.Ravikumar & Unit
Tiruvarur Natesh Theatre
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியின் பிறந்தநாள் வெளியீடாக வந்து அவரது ரசிகர்களை மகிழ்வித்த படம்.
courtesy:rajinifans.com
பிளாஷ்பேக்கில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலகட்டத்தில் சில காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இப்போது நாம் விடுமுறையில் சுற்றுலா செல்வதற்காக செல்லும் அணைக்கட்டுகள் உருவாவதில் மக்கள் எந்த அளவுக்கு உழைத்திருப்பார்கள், எவ்வளவு பேர் என்னென்ன தியாகம் செய்திருப்பார்கள் என்பதை இன்றைய தலைமுறைக்கு தகவல் சொல்லும் விதமாக படத்தில் அணைக்கட்டு கட்டுமானம் தொடர்பான காட்சிகள் அமைந்திருந்தது.
courtesy: Linga movie & Unit
***
லிங்கா
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment