Saturday, January 11, 2020

மீரா (1992) படத்தில் பட்டர்பிளை


1992 ஆம் ஆண்டு விக்ரம்–ஐஸ்வர்யா நடிப்பில் P.C.ஸ்ரீராம் ஔிப்பதிவு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த படம். திருவாரூரில் செங்கம் தியேட்டரில் திரையிடப்பட்டது.




இந்த படத்தில் ஓ பட்டர்பிளை என்ற பாடல் அருமையான மெலோடியாக இருக்கும். பாடல் காட்சி முழுவதுமே வண்ணத்துப்பூச்சிகள் ஐஸ்வர்யா கையில் இருந்து பறப்பது, வண்ணத்துப்பூச்சிக்கு முத்தமிடுவது, வண்ணத்துப்பூச்சி ஐஸ்வர்யா மேல் அமர்ந்திருப்பது என்று இருக்கும்.
இப்போது என்றால் வண்ணத்துப்பூச்சியை துன்புறுத்துகிறார்கள் என்று கொடி பிடிக்க ஆட்கள் இருப்பதால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வண்ணத்துப்பூச்சியே போதும் என்று முடிவெடுத்து விடுவார்கள். நண்பன் படத்தில் இலியாவைப் பார்த்திருப்பீர்களே.
அப்போது 1992ஆம் ஆண்டு இந்த அளவுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இந்தியாவில் மேம்படாத நேரம். படக்குழுவினர் விசாரித்துக் கொண்டு பட்டாம்பூச்சி பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கிய ஒருவரை பார்த்து அவர் உதவியுடன்தான் உண்மையான பட்டாம்பூச்சிகளை பிடித்து ஐஸ்வர்யாவுடன் பாடல்காட்சிகளில் வைத்து படம் பிடித்திருக்கிறார்கள்.
படத்தின் டைட்டில் கார்டில் ‘நன்றி’ என்று அந்த பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள்.

No comments:

Post a Comment