Monday, January 20, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 20

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.

கபாலி - 2016
 இந்த படம் திருவாரூர் தைலம்மை மற்றும் நடேஷ் தியேட்டரில் திரையிடப்பட்டது.

உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி ஆகிய படங்களின் வெற்றி காரணமாக அருணாச்சலம் படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சி க்கு கிடைத்தது. 
courtesy: Natesh Theatre, Thiruvarur
அது போலவே அட்டக்கத்தி, மெட்ராஸ் என்று இரண்டு படங்கள் மூலமாகவே கவனம் ஈர்த்த ரஞ்சித்துக்கு கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

பலரும் பேத்தி வயதுடைய நடிகைகளுடன் டூயட் ஆடிக்கொண்டிருக்கிறார் என்று விமர்சித்த நேரத்தில் அறுபது வயது கதாபாத்திரத்தில் நடித்த போதும் சூப்பர் ஹிட்டானது படம். ரஜினி என்ற மனிதருக்குதான் ரசிகர்கள், அவரது வயதான தோற்றம் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்று ரசிகர்கள் சொல்லாமல் சொன்ன படம்.
courtesy: Superstar Rajinikanth &
Kalaipudi V.Dhaanu &
Director  Pa.Ranjith
அதிலும் பல ஆண்டுகளாக பிரிந்திருந்த மனைவியை தேடி தவிக்கும் காட்சிகளில் நல்லதொரு நடிப்பை வழங்கியிருப்பார்.
courtesy: Tiruvarur Thailammai Theatre
சரியாக படிக்காதவர்கள் கூட டமில் என்று பேசிக்கொண்டிருக்கும் காலத்தில் மகிழ்ச்சி என்ற வார்த்தையை ரஜினி உச்சரிக்கவும், ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களில் பலரும் கூட மகிழ்ச்சி என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியதை காண முடிந்தது. சினிமாவில் ரஜினி பேசும் வசனத்திற்கு எவ்வளவு தாக்கம் இருக்கிறது என்பதை மறுபடியும் நிரூபித்த படம்.
courtesy: rajinifans.com
***
கபாலி
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment