Tuesday, January 21, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 21

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.

காலா - 2018

இந்த படம் திருவாரூர் நடேஷ் மற்றும் சோழாவில் திரையிடப்பட்டது.
நான்கு மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், கிராமத்து மனைவி, சிறுவயது காதலியை வயதான பிறகு மீண்டும் சந்திக்கும் மணிவிழா கொண்டாடும் நாயகன் என ரஜினி நடித்த படம்.
courtesy: Superstar Rajinikanth & Kaala Movie Unit
கலர்கலராக காஸ்ட்யூம் எதுவும் பயன்படுத்தாமல் பெரும்பாலான காட்சிகளில் கருப்பு வேட்டி, கருப்பு சட்டை என்று எளிமையான உடையில் நடித்த படம்.

சுள்ளான் படத்தில் தனுஷ் அக்காவாக வரும் ஈஸ்வரி ராவைப் பார்த்து, என்னோட தலைவனை நீ சைட் அடிக்கிறியா. அவர் கிட்ட நெருங்க முடியாது என்று கிண்டல் செய்வார். அதே ஈஸ்வரிராவ், ரஜினியிடம் ஐலவ்யூ சொல்லி கலக்கிய படம் இது.
courtesy:rajinifans.com
எனக்கு தெரிந்து இருபத்தைந்து ஆண்டுகளில் ரஜினியைப் பார்த்து எந்த படத்திலும் கதாநாயகியைப் பார்த்து ரஜினியும், ரஜினியைப் பார்த்து கதாநாயகியும் இத்தனை காதலுடன் ஐ லவ் யூ என்று சொன்னதாக நினைவில்லை.
courtesy: Natesh Theatre, Tiruvarur
திருமணம், பிறந்தநாள் போன்று விசேச தினங்களில் ஒரு நபரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது வேறு. மற்ற நேரத்தில் ஒருவர் காலில் விழுவது சுயமரியாதைக்கு இழுக்கு என்பதை மறைமுகமாக உணர்த்துவதற்குதான் படத்தில் நானாபடேகர் தனது பேத்தியை ரஜினி காலில் விழ சொன்னதும், தடுத்து வணக்கம் சொன்னால் போதும் என்று கூறும் காட்சி இருப்பதாக எனக்கு தோன்றியது.
courtesy: Chola Theatre, Tiruvarur
இந்த படம் பேசிய அரசியல் படத்திற்கான கற்பனை. இப்படி எல்லாம் நிஜத்தில் இருக்காது என்று நம்பும் மக்களும் ஏராளமாக இருக்கிறார்கள். 
***
காலா
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment