Wednesday, January 22, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 22

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.

2.0 (எந்திரன் 2ஆம் பாகம்) - 2018
இந்த படம் திருவாரூர் நடேஷ் தியேட்டரில் திரையிடப்பட்டது.
எந்திரன் படத்தின் அடுத்த பாகமாக நீண்டநாள் தயாரிப்பில் இருந்து வெளிவந்த படம். ரஜினி நினைத்தால் அவரை கொஞ்சம் கூட சிரமப்படுத்தாமல் படம் இயக்க ஆட்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் கதைக்கு அவசியம் என்பதால் தன் உடல் கஷ்டத்தை பொருட்படுத்தாமல் சிரமப்பட்டு நடித்த படம் என்று சொன்னார்கள்.

இப்போதெல்லாம் முப்பத்தைந்து வயதிலேயே உடல்நலக்கோளாறு என்றும் கொஞ்சம் கூட நடக்க முடியவில்லை என்றும் சொல்பவர்கள் யோசிக்க வேண்டும். தூங்கும்போது கூட செல்போன்களை கையில் வைத்திருப்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள்.
courtesy: Enthiran 2.0 Movie & Unit, Superstar Rajinikanth, 
Tiruvarur Natesh Theatre
அவர்கள் கையில் இருந்தெல்லாம் திடீர் திடீரென செல்போன்கள் மாயமானால் என்ன ஆகும் என்ற அறிவியல் கற்பனையை வைத்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

படம் மிகப்பெரிய பட்ஜெட் என்பதால் தமிழ் மட்டுமின்றி சில இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்வதற்கு ஏற்றவாறு கதை அமைக்கப்பட்டிருந்தது.
courtesy: rajinifans.com
சமீப காலமாக தமிழ்ப்படங்கள் பிற மொழிகளையும் குறிவைத்து எடுக்கப்படுவதால் நேட்டிவிட்டி என்று சொல்லப்படும் கதை நிகழும் களம் என்பது தமிழகத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அந்நியப்பட்டுகொண்டே செல்கின்றன. அதற்கு இந்த படமும் விதிவிலக்கல்ல.
ஆனாலும் தொழில்நுட்பத்திலும் உருவாக்கத்திலும் சவால் விட்ட படம்.
***
2.0 (எந்திரன் 2ஆம் பாகம்)
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment