Thursday, January 23, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 23

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.

பேட்ட - 2019


இந்த படம் திருவாரூர் நடேஷ் தியேட்டரில் திரையிடப்பட்டது.
courtesy: Director Karthik Suppuraj & Tiruvarur Natesh Theatre
பொதுவாக ரஜினிகாந்த் படங்கள் என்றாலே கோடை விடுமுறையை குறிவைத்துதான் அதிகமாக ரிலீசாகி உள்ளன. 
courtesy:Superstar Rajinikanth & Petta movie unit
1995ல் பாட்ஷா படத்திற்கு 24 ஆண்டுகள் கழித்து 2019ல்தான் பொங்கலுக்கு ரஜினி படம் வெளியானது. ரஜினி படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு பிறந்த ஒருவர், சிறுவயதில் ரஜினி படங்களை தியேட்டரில் பார்த்து விசிலடித்த ஒரு ரஜினி ரசிகர் இயக்கும் படமாக பேட்ட அமைந்தது.

பார்க்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த வசனம் டிரைலரிலேயே இடம் பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியது.

courtesy: rajinifans.com

பொண்டாட்டி பிள்ளைங்க இருக்குறவன் எல்லாம் இப்பவே ஓடிப்போயிடுங்கடா என்ற வசனத்தையும் தொலைக்காட்சி டீசரில் பார்த்த எனது மகன் பல நாட்கள் அந்த வசனத்தைப் பேசிக்கொண்டிருந்தான். அப்போது அவனது வயது 2¾.
சிம்ரன் மற்றும் த்ரிஷாவுடன் ரஜினியின் ஸ்டில்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினி ரசிகர்களை துள்ளலுடன் ஆடச் செய்ததது.
courtesy: moviegalleri.net
***
பேட்ட
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment