Monday, January 6, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 6

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.
உழைப்பாளி - 1993

இந்தப்படம் 1993 ஜூன் மாதத்தில் தைலம்மை தியேட்டரில் வெளிவந்தது.


பாடல்கள் அனைத்தும் கலக்கல் ரகம். திருவாரூரில் அரசுப்பேருந்து டெப்போவின் வாசல் அப்போது தலைமை தபால் அலுவலகம் அருகில் இருந்தது. அதன் அருகில் ரோட்டோரக்கடையில்தான் பாட்டுப்புத்தகங்கள் விற்பனையாகும். அதில் உழைப்பாளி படத்தின் பாட்டுப்புத்தகத்தை வாங்கி படித்துப் பார்த்திருக்கிறேன்.

courtesy: Thailammai Theatre Tiruvaur &
Rajvideo vision
பல படங்களில் நடித்திருக்கும் அய்யர், இந்தப் படத்தில் சிவபெருமான் வேஷத்தில் வரும் ரஜினியை வண்டியின் பின்னால் அமர வைத்து அழைத்துச் செல்லும் நகைச்சுவைக் காட்சிகள் இன்றுவரை இணையதள மீம்ஸ்களில் பயன்படுத்தப்படுகிறது. அப்போது மிகப்பெரிய அளவில் பிரபலமான நகைச்சுவை இது.
courtesy: Superstar Rajinikanth & Vijaya Productions
இந்தப்படத்தின் டைட்டில் காட்சிகளில் சென்னை உழைப்பாளர் சிலை முதல் பல்வேறு உடலுழைப்பு தொழிலாளர்களின் ஒன்றிரண்டு நகர்வுகள் ஓடி ஸ்டில்களாக மாற்றிக் காட்டப்படும். உழைப்பாளி என்ற டைட்டிலுக்கு 100 சதவீதம் நியாயம் செய்த டைட்டில் காட்சிகள் அவை.
courtesy:
rajinifans.com
ரஜினி படங்களில் என்னை மிகவும் கவர்ந்த டைட்டில் கார்டுகளில் இந்த படத்தின் டைட்டில் காட்சிக்குதான் முதல் இடம்.
***
உழைப்பாளி
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment