Tuesday, January 7, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 7

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.
வள்ளி - 1993
இன்றைக்கு 2020ஆம் ஆண்டிலும் பெண்கள் பாலியல் ரீதியாக மோசமாக பாதிக்கப்படும் சூழ்நிலை இருந்து வருகிறது.

பெண்கள் நிறைய படிக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தெரிகிறது. அப்படி இருந்தாலும் இன்றைக்கும் காதல் என்ற பெயரில் இன்பமாக இருந்து விட்டு ஒதுங்கி ஓடி விடும் ஆண்களின் பேச்சை நம்பி விடுகிறார்கள்.

ரஜினிகாந்த் நினைத்திருந்தால் தனக்கு பொருந்திப்போகக்கூடிய வழக்கமான ஆக்சன் படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்திருக்கலாம்.

இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஏமாற்றிச் செல்லும் ஒருவனை அவள் என்ன செய்தாள் என்ற கதையை உருவாக்கி தயாரித்திருக்கிறார் என்றால் ரஜினியின் மனதில் மிகவும் விருப்பப்பட்டு படைத்த திரைப்படம் என்று இதனை சொல்லலாம்.

ஸ்ரீராகவேந்திரர் படத்தில் நடித்தது அவர் மனதில் இருந்த பக்தி என்று சொல்வார்கள். அதைப் போல் வள்ளி படத்தை பெண் சமுதாயத்திற்கு ஏதாவது செய்தி சொல்ல வேண்டும் என்ற உத்வேகத்தினால் உருவாக்கியிருக்க வேண்டும். 

ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்தாலும், அவர் முதன் முதலில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்த படம் என்பதாலும் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருந்ததாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
courtesy :
valli movie & Chola theatre, Tiruvarur
படம் வெளியாகி ஒரு வாரத்திலேயே சென்று பார்த்தேன். வசனங்கள் அழுத்தமாகத்தான் இருந்தன. அவற்றில் சில எந்த காலகட்டத்திற்கும் பொருந்திப் போவதும் சிறப்பு.
courtesy :
Rajini arts & Superstar Rajinikanth
‘‘வேலை வெட்டி கேளுங்கய்யா... சேலை வேட்டி நாமளே வாங்கிக்கலாம்...’’

‘‘தப்பு செஞ்சவனை தப்ப விட்டுட்டு அவ தற்கொலை பண்ணிகிட்டா...’’ என்று மனைவியைப் பற்றி பேசுவதாகட்டும், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வள்ளி படத்தில் வந்த காட்சி அமைப்பு அந்த காலகட்டத்தைப் பொறுத்தவரை புரட்சிதான்.
courtesy
rajinifans.com
அது வரை, பாலியல் தாக்குதலுக்கு ஆளான பெண் தற்கொலை செய்து கொள்வதாகத்தான் பெரும்பாலான படங்கள் வந்து கொண்டிருந்தன.

தண்டனை தப்பு செய்தவனுக்குத்தானே தவிர பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்திய படம்.
courtesy
rajinifans.com
இது போன்று தப்பு செய்பவனை கொலை செய்வதால் நிரந்தர தீர்வு கிடைக்காது என்றாலும், 25 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போதுதான் பாலியல் குற்றம் செய்யும் மனநிலை இல்லாமல் ஆண் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்ற விவாதம் தொடங்கியிருக்கிறது.
courtesy
rajinifans.com
அன்றைய சூழ்நிலையை முன்வைத்துப் பார்க்கும்போது படத்தில் அமைக்கப்பட்ட கிளைமேக்ஸ் நிச்சயமாக மாறுபட்ட சிந்தனை எனலாம்.

No comments:

Post a Comment