Wednesday, January 1, 2020

நல்லாருப்போம்... நல்லாருப்போம்... எல்லாரும் நல்லாருப்போம்...!


நடிகர் விஜய் நடித்து 2003ஆம் ஆண்டு வெளியான படம் திருமலை. படத்தின் துவக்க காட்சிகளில் புதுவருடப்பிறப்பு கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும்.

அணைக்கப்பட்டிருந்த விளக்குகள் சரியாக 12 மணிக்கு போடப்பட்டதும் விஜயை சந்திக்கும் ஜோதிகா, ‘புது வருசத்துல நான் சந்திச்ச முதல் ஆள் நீங்கதான்... நல்லாருப்போம்... நல்லாருப்போம்... எல்லாரும் நல்லாருப்போம்... ஹேப்பி நியூ இயர்’ என்று சொல்லி சாக்லேட் கொடுப்பார்.
courtesy : Thirumalai - Movie & Team
Malligarjuna Theatre, Hydrabad.
விருப்பம் இல்லாத கதாநாயகியை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரத்தை விஜய் ஏற்றிருப்பார். இதைப் பார்த்து ஆர்வக்கோளாறாகி எத்தனை அரைவேக்காட்டு இளைஞர்கள் தாங்கள் எங்கேயோ ஒருமுறை பார்த்த பெண்ணின் பின்னால் சுற்றி தொந்தரவு கொடுக்கிறார்களோ என்ற விமர்சனம் எழுந்தது.

படத்தைப் பார்த்து விட்டு அதைப்போல் செய்யும் ஆர்வக்கோளாறு நபர்கள் நம் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள்தான். அவர்களில் எத்தனை பேர், திருமலை படத்தில் திருமண கோலத்தில் காதலியை அழைத்து வந்த நண்பனை கண்டித்து, அங்கே ஏமாற்றமடைந்து இருக்கும் மாப்பிள்ளை குடும்பத்தைப் பற்றியும் யோசிக்க வைத்த காட்சியைப்பற்றி நினைத்துப் பார்த்திருப்பார்கள்?

தப்பு காரியம் செய்வதற்கு மட்டும் படத்தில் இடம்பெற்ற காட்சிகளை துணைக்கு அழைத்துக் கொள்ளும் நபர்கள் என்னைப் பொறுத்தவரை மன முதிர்ச்சி அடையாதவர்கள்தான்.

இந்த படத்தில் ஜோதிகா சாக்லேட் கொடுத்து புத்தாண்டு வாழ்த்து சொல்லும் காட்சியில் வரும் நல்லாருப்போம்... நல்லாருப்போம்... எல்லாரும் நல்லாருப்போம்... என்ற வசனம் 17 ஆண்டுகள் கடந்த பிறகும் என் மனதில் நிலைத்து இருக்கிறது.

இதே போல் நாம் காணும் எந்த ஒரு காட்சியிலும் நல்ல விஷயத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு நல்லது அல்லாததை ஒதுக்கும் மனநிலையை இளைஞர்கள், இளம்பெண்களிடம் மட்டுமல்ல, சிறுவர் சிறுமியர்களிடம் கூட உண்டாக்கும் பொறுப்பு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

நல்லாருப்போம்... நல்லாருப்போம்... எல்லாரும் நல்லாருப்போம்...!

No comments:

Post a Comment