Sunday, January 5, 2020

ஆல் இஸ் வெல்


நான் படித்த புத்தகங்கள் பற்றிய அறிமுகம்
நூலின் பெயர் : ஆல் இஸ் வெல்
கட்டுரைகள்
ஆசிரியர் : சைக்காலஜிஸ்ட் டாக்டர் அபிலாஷா
பக்கம் : 128
விலை : 80
இரண்டாம் பதிப்பு : பிப்ரவரி 2019
வெளியீடு : விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை  600 002
ISBN 978-1-8476-700-1

ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் அவள்விகடன் பத்திரிகையில் 26 அத்தியாயங்கள் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. பெண்கள் பத்திரிகைகளில் வெளிவந்ததால் பெரும்பாலும் பெண்களை இலக்காக கொண்டே கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இது ஆண், பெண் என இருபாலருக்கும் அவசியமான வழிகாட்டுதல்களைக் கொண்ட கட்டுரைகள்தான்.
காதல், திருமணம், குடும்பம், உறவுகள் என்ற வட்டத்தில் சிறு விஷயங்களில் கூட புரிதல் இல்லாமல் நம் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை, கொலை என்று எந்த எல்லைக்கும் செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறார்கள். 

இப்படி குழம்பித்தவிக்கும் மனதுடையவர்கள் மனதை ஆற்றுப்படுத்துவது போல் வழிகாட்டுகிறது இந்த கட்டுரைகள்.

 • கமிட்மென்ட்கள் கழுத்தை நெரிக்குதுடா சாமி என்ற விழிபிதுங்கலும் இல்லாமல், கமிட்மென்ட்களே இல்லப்பா என்ற கட்டவிழ்த்த நிலையும் இல்லாமல் ஒரு கமிட்மெண்ட் இருக்கு, அதை எப்படியாவது முடிச்சுடணும், முடிப்பேன் என்ற நம்பிக்கையுடன் அதற்கான முரட்டுப்பாதையில் விருப்பத்துடன் கடப்பதே பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ். சுருக்கமாகச் சொன்னால் இஷ்டப்பட்டு கஷ்டப்படுவது...
 • நம் கமிட்மெண்ட்டை மற்றவர்களின் கட்டாயத்தாலோ சமூகக் கடமையாலோ இல்லாமல் நமக்காக தேர்ந்தெடுத்தால்தான் நம்மால் சந்தோஷமாக உழைக்க முடியும்.
 • ஒருவரை கோபப்படுத்தினால் என்னவாகும்? காயப்படுத்தினால் என்ன நிகழும்?
 • கோபம் இயல்பானதே. ஆனால் அது உருவாக்குதல் வகை கோபமாக இல்லாமல் அழித்தல் வகை கோபமாக இருந்தால் அதை திசை திருப்பும் வழி அறிவது அவசியம். உங்கள் சாய்ஸ் இசையா, சமையலா, வாசிப்பா, எழுத்தா?
 • சந்தேகத்தால் குடும்பம் குலையக்கூடாது
 • தாழ்வு மனப்பான்மையை அகற்றி உங்களிடம் உள்ள சிறப்புத்திறனை நினைத்து பெருமைப்படுதல்
 • ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டால் உடல்நலம் அபாயகட்டத்திற்கு சென்றுவிடும் வகையில் உடல் பலவீனமாக உள்ள நம்முடைய உறவுகள் நட்பு வட்டத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்
 • குழப்பமான நேரத்தில் என்ன செய்ய வேண்டும்?
 • தகவல்தொடர்புத்திறனில் சரியாக இருக்கிறோமா தவறாக இருக்கிறோமா என்று எப்படி அறிவது?
 • நேர்மையான நேசத்தை (வயது கடந்த காதலை) ஏற்கப்பழகுவது எப்படி?
 • காதலிப்பவர்களுக்கும், காதலிக்க நினைப்பவர்களுக்கும் சில ஆலோசனைகள்
 • ஒரு ஆணால் ஒரு பெண்ணை முழுமையா புரிஞ்சுக்கவே முடியாதா?
 • திருமணம் செய்து கொள்ளாமல் வாழ முடியாதா என்ற கேள்வி பலவீனமானது.
 • நிம்மதி, சந்தோஷத்துக்கு சுற்றுலா அவசியம்
 • அடுத்தவரின் சுயமரியாதையை மதிக்கப் பழகுவது
 • தாய் மகளிடம், மகள் தாயிடம் எப்படி நடந்து கொள்வது
 • உறவுக்கு மரியாதை
 • பிரச்சனை எழும்போது அதைப் பிரச்சனைக்குரியவர் நிலையில் இருந்து யோசித்தால் தீர்வு எளிதாகும்
 • குழந்தைகளின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்குவது எப்படி
 • குழந்தைகளுக்கு என்னென்ன சொல்லிக்கொடுக்க வேண்டும்
 • குழந்தைகளை ஆர்வமுடன் சாப்பிட வைப்பது எப்படி
 • இந்த உலகம் விட்டுச் செல்லும் எந்த உறவின் ஆத்மாவும் தான் நேசித்த உறவும் உயிர் துறக்க விரும்பாது. தான் வாழாத வாழ்வையும் அவர் சேர்த்து வாழவே ஆசீர்வதிக்கும்.
 • நல்ல வார்த்தைகளையே பேசுவது
 • கிடைத்ததை கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி

என்று ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்துக் கொண்டு தெளிவாக ஒவ்வொரு கட்டுரையும் இருக்கிறது.
பெரும்பாலும் அன்றாட வாழ்வில் ஒருவருக்கு பொதுவாக என்னென்ன பிரச்சனைகள் வருமோ அவைகளை பொருளாக எடுத்துக் கொண்டு எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இவை.

No comments:

Post a Comment