Sunday, January 12, 2020

ரெண்டையுமே மக்கள் தாங்க மாட்டாங்க


சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருந்த படத்திற்கு கவிஞர் கண்ணதாசனை பாட்டெழுத சிவாஜி அழைத்துள்ளார். குறிப்பிட்ட நாளில் வழக்கம்போல் கண்ணதாசம் செல்லாமல் வேறு வேலையாக இருந்துள்ளார்.




அப்போது சிவாஜி, ‘‘கவிஞா... மரியாதையா வந்து பாட்டெழுது... இல்லன்னா அந்த பாட்டை நானே எழுதிடுவேன்...’’ என்று செல்லமாக சொல்லியுள்ளார்.

அதைக்கேட்ட கண்ணதாசன், ‘‘வேணாம்பா... நீ பாட்டெழுத வந்தா நான் நடிக்க வந்துடுவேன்... ரெண்டையுமே மக்கள் தாங்க மாட்டாங்க...’’ என்றாராம்.
(தினத்தந்தி இணைப்பிதழில் கண்ணதாசன் குமாரர் அண்ணாதுரை எழுதி வரும் தொடர் கட்டுரையில் 10–01–2020ல் படித்தது.)

No comments:

Post a Comment