Monday, January 6, 2020

ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள்

ஜனவரி 6 இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள்


அவருக்கு திருவாரூர் மக்கள் சார்பாக வாழ்த்துகள்.

image credit : gstatic dot com
ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை குறிப்புகளை பலரும் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். சிறு வயதில் இருந்து இசைத்துறையில் கடுமையான பயிற்சி எடுத்துதான் அவர் இந்த உயரத்தை அடைந்துள்ளார்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் இதழில் என்.சொக்கன் எழுதிய சுயமுன்னேற்ற கட்டுரைத் தொடர் ஒன்றில் ஒருவர் ஒரு துறை அல்லது செயலில் நிபுணத்துவம் பெற பத்தாயிரம் மணி நேரப் பயிற்சி அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதில் ஏ.ஆர்.ரஹ்மான், பில்கேட்ஸ் என பல துறைகளிலும் உச்சம் பெற்ற சிலரைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இது உதாரணம் மட்டுமே. சிலரது தனித்திறனைப் பொறுத்து இந்த மணிக்கணக்கு இது மாறுபடலாம்.

உலகப்புகழ் பெற்ற, கோடீஸ்வரர்களை மட்டுமே உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. வீட்டில் நம் தாய், மனைவி, சகோதரிகளையே எடுத்துக்கொள்ளுங்கள். சமையலில் எத்தனை ஆயிரம் மணி நேரங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் என்று நாம் கணக்கில் வைத்துக்கொள்வதில்லை. அவர்கள் ஓரிருநாள் வெளியூர் சென்றிருக்கும் நேரத்தில் நம்மால் உருப்படியாக ஒரு காப்பி போட்டு குடிக்க முடிகிறதா?

அது அம்மாக்களுக்கு ஓ.கே. இப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் குடும்பம் நாங்கள் என்று சொல்கிறீர்களா?

அதிகம் படிக்காத பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என்று பலரும் தொடர்ந்து பயன்படுத்துவதால் எவ்வளவு லாவகமாக தொடுதிரை போன்களை பயன்படுத்துகிறார்கள். இதைப் பார்க்கும்போது பத்தாயிரம் மணி நேரப் பயிற்சியின் மகிமை உங்களுக்கு புரிந்திருக்கும்.

இப்படி ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றால் நாம் கோடீஸ்வரனாகிவிட முடியுமா என்று நீங்கள் கேட்கலாம்.

இன்றைய உலக நடப்பு, உலகப் பொருளாதாரம், மக்கள் தொகை, வாடகை, கல்வி, மருத்துவம், போக்குவரத்து செலவுகள் போன்ற அனைத்தையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே இப்படி நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறோம்.,


நல்லாருப்பாம்... நல்லாருப்போம்... எல்லாரும் நல்லாருப்போம்.

No comments:

Post a Comment