Saturday, February 29, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் (குறுநாவல்)

அமேசான் Pentopublish2019 க்காக நான் எழுதிய குறுநாவல் – காகிதத்தில் ஒரு கடிதம்.
கடந்த ஆண்டு போட்டிக்காகவும் ஒரு குறுநாவலை எழுதியிருந்தேன். அந்த புத்தகத்தை ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு ஒரே ஒரு பிரதி Print On Demand முறையில் அச்சிட இணையத்தில் முகவரி தேடியபோது onlineprintingz.com கிடைத்தது. நாம் ஆர்டரை கொடுக்கும்போது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் ஆகும் என்று சொல்கிறார்கள். ஆனால் இரண்டு நாட்களில் புத்தகம் கைக்கு கிடைத்து விடுகிறது. 
 இந்த முறை நான் 10 புத்தகம் ஆர்டர் கொடுத்தேன். அட்டைப்படம் CMYK வகை பைலாகவும் குறுநாவல் இருக்கும் உள்ளடக்க பகுதியை PDF பைலாகவும் அப்லோடு செய்தேன். தொகையில் இணையவழி பரிமாற்றம்தான். வழிமுறைகள் எளிதாக இருக்கின்றன. சென்னையில் இருப்பவர்கள் நேரில் பெற்றுக்கொள்வதாக இருந்தால் புத்தகத்திற்கான கட்டணம் மட்டும் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஆப்செட் பிரிண்டிங் முறையில் 500 புத்தகம் முதல் தேவையான எண்ணிக்கையில் அச்சடித்து தருகிறார்கள். அதற்கு கட்டணம் ஓரளவு குறைவாகத்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment