Sunday, March 1, 2020

ஐந்து பயணிகளை கூடுதலாக அமர வைக்க ஐம்பத்தைந்து பயணிகளையும்...

தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் முன்பெல்லாம் 57+2 என்ற விதத்தில் இருக்கைகள் வடிவமைக்கப் பட்டிருக்கும். அதாவது 57 பயணிகள் இருக்கையும் ஓட்டுநர், நடத்துநர் இரண்டு பேரையும் சேர்த்து 59 இருக்கைகள் இருக்கும்.
Courtesy : TNSTC blog
ஒரு மணி நேரத்துக்கு மேல் பயணம் செய்பவர்கள் ரொம்பவே அவதிப் படுவார்கள். அதாவது இருக்கை வரிசைகளுக்கான இடைவெளிகள் மிகவும் குறைவு. ஒல்லியானவர்கள் கூட காலை தாராளமாக முன் பின் நகர்த்த முடியாது.
Courtesy : TNSTC blog
இப்போது கடந்த சில மாதங்களாக ஓடத் தொடங்கியிருக்கும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் புதியவை வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தில் ஒரு முக்கிய செயலுக்காக மிகவும் பாராட்டு பெறுகின்றன.
52+2 என்ற எண்ணிக்கையில்தான் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. அதாவது ஒரு வரிசை இருக்கைகளான 5 இருக்கைகள் மட்டும்தான் குறைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் இடைவெளி சற்று கூடுதலாக இருப்பதால் அனைவருமே சவுகர்யமாக அமர்ந்து பயணம் செய்ய முடிகிறது. சின்ன மாற்றம், மிகப்பெரிய நன்மை அளித்துள்ளது.
ஐந்து பேர் கூடுதலாக அமர வேண்டும் என்பதற்காக இதுநாள் வரை 55 பேரும் சிரமத்தை அனுபவித்து வந்துள்ளார்கள். அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த புதிய பேருந்துகளை வடிவமைத்த குழுவினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment