Sunday, March 1, 2020

திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் காகிதத்தில் ஒரு கடிதம் குறுநாவல் – புத்தகம்

பிரிண்ட் ஆன் டிமாண்ட் முறையில் 10 புத்தகங்கள் அச்சிட்டு அவற்றில் 5 புத்தகங்களை திருவாரூர் மாவட்ட மைய நூலகத்திற்கு வழங்கியுள்ளோம்.
அச்சுப்புத்தகத்தில் படிக்க விரும்புபவர்கள் திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் எடுத்து படிக்கலாம்.
அமேசான் கிண்டில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் (Unlimited Subscriber) இலவசமாக இந்த குறுநாவலை படிக்கலாம்.



*********************
கதையிலிருந்து...
வெளி கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றபோது, வீட்டுக்குள் ஏதோ ஒரு தொலைக்காட்சி தொடரில், அவளை நிம்மதியா பிள்ளை பெத்துக்க விட்டுடுவேனா... என்று ஒரு பெண் சவால் விட்டுக் கொண்டிருந்தாள்.
அந்த வசனத்தை தனபாலனும் காதில் வாங்கியதால் அண்ணாமலையின் முகத்தைப் பார்த்தார்.
‘‘இவங்கதான் பொண்ணைத் தொலைச்சவங்க...!?’’ என்று சொல்லிவிட்டு, அழைப்பு மணியை அழுத்தினான்.
பதினைந்து வினாடி தாமதத்திற்கு பிறகு கதவைத் திறந்தது, தேவிரஞ்சனியின் தந்தை காத்தலிங்கம்.
‘‘என்ன சார்... எங்க பொண்ணைப் பத்தி ஏதாவது தெரிஞ்சதா...’’ என்று ஆர்வமாக கேட்டார்.
அவரிடம் பதில் சொல்லாமல், தனபாலனைப் பார்த்து, ‘‘நல்லா நடிக்கிறாரே...’’ என்றான் அண்ணாமலை.
‘‘என்ன சார் சொல்றீங்க...?’’
‘‘பதறாதீங்க... உள்ள போய் பேசலாமா...?’’
காத்தலிங்கம் வேறு வழியின்றி ‘‘வாங்க...’’ என்று சொன்னார்.
அவரது மனைவி, தொலைக்காட்சியின் ஒலி அளவைக் குறைத்தார்.
‘‘உண்மையை மறைக்காம சொல்லுங்க... உங்க பொண்ணு எங்க...?’’
‘‘சார்... அவளைக் காணோம்... கண்டுபிடிச்சு கொடுங்கன்னு உங்க ஸ்டேஷன்லதானே புகார் கொடுத்துருக்கோம்... இப்போ திடீர்னு ராத்திரி நேரத்துல வந்து இப்படி கேட்குறீங்க...?’’
‘‘மறுபடி மறுபடி உண்மையை மறைக்க முயற்சி பண்ணாதீங்க... எங்களுக்கு உண்மை தெரியலைன்னாலும், உங்க பாடி லாங்குவேஜ் தெரியுது... பொண்ணு என்ன ஆனான்னு தெரியாம தவிக்கிற பெற்றோர் நீங்க இல்லை...
எங்க நேரத்தை வீணடிக்காம உள்ளதை சொன்னீங்கன்னா நல்லது... இல்லன்னா, தேவிரஞ்சனியை கைது பண்ற வரைக்கும் உங்களை கொண்டு போய் உள்ள வைக்க வேண்டியிருக்கும்...’’  அண்ணாமலை இவ்வளவு பேசியும் அவர்கள் இருவரும் அசருவதாக தெரியவில்லை.
மவுனமாகவே நின்றார்கள்.
‘‘பொண்ணை விட சீரியல் அவ்வளவு முக்கியமா போயிடுச்சா... அதை நிறுத்துங்க...!’’ என்ற குரலின் கடுமை தாங்காமல் ரிமோட்டை எடுத்த காத்தலிங்கம் ஏதோ ஒரு பொத்தானை அழுத்தி வைக்க, இப்போது டி.வியில்
பரத் நடித்த காதல் திரைப்படத்தில், ஒரு கையுடன் துணை நடிகர்,‘‘நாங்க சிங்கம்டா...’’ என்று சொல்லி ஆவேசத்துடன் பரத் தலைமுடியை பிடித்து உலுக்கினார்... பதற வைக்கும் பின்னணி இசையுடன் அந்த சுமோ ஒரு வளைவில் திரும்பும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.
*******************************************

No comments:

Post a Comment