Sunday, April 5, 2020

மூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 1

நான் படித்ததில் இருந்து...

அத் - 1, பக் - 7
கண்ணாடியில் நம் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் நாம் வளர்ச்சி பெற்ற ஒரு வாலில்லாக் குரங்கு என்கிற பூர்வீகம் நமக்குத் தெரிவதில்லை. ஒரு நொடி அந்த எண்ணத்தோடு நம் பிரதிபலிப்பைப் பார்த்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றதைப் போன்று தோன்றும். யாராவது நம்மைக் குரங்கு என்று திட்டிவிட்டால் அவர்களோடு பேசுவதையே நிறுத்தி விடுவோம். சிங்கம் என்று சொன்னால் மகிழ்கிற நாம், அதை விடப் புத்திசாலியான சிம்பன்ஸி என்று சொன்னால் ஏன் கோபித்துக் கொள்கிறோம்!

நமக்கு அதெல்லாம் தோன்றாததால்தான் மணிக்கணக்கில் கண்ணாடி முன் நின்று அழகு பார்த்துக் கொள்கிறோம். கணினி இல்லாவிட்டால் நாம் வாழ்ந்து விட முடியும். கண்ணாடி இல்லாவிட்டால் இயலாது.

(அப்போ, கண்ணாடியை பார்க்குறதுலயும் அலங்காரம் பண்ணிக்குறதுலயும் அக்கறை காட்டாதவங்க இருக்குறதுக்கும் அவங்க மூளைதான் காரணமா இருக்குமோ?)

No comments:

Post a Comment