Saturday, April 11, 2020

மூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 13

நான் படித்ததில் இருந்து...

அத் - 4, பக் - 20

மனித மூளையின் வளர்ச்சிக்கு நெருப்பும் ஒரு காரணம். சிம்பன்ஸிகள் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரத்தை பச்சை உணவை மெல்லவும், விழுங்கவும் செலவழிக்கின்றன. நமக்கு சமைத்த உணவை உண்ண ஒரு மணி நேரம் போதும். சின்னப் பற்களும், சின்னக் குடல்களும் நமக்குப் போதும். சமைத்த உணவை சாப்பிட ஆரம்பித்ததும் பெருங்குடல், சிறுகுடல் ஆகியவற்றின் நீளம் குறைந்து அதற்கான ஆற்றல் மூளையை முடுக்கப் பயன்பட்டது. 

மூன்று வேளையும் இயற்கை உணவை முன்மொழிபவர்கள் இதற்காக முணுக்கென்று கோபித்துக் கொள்ளக்கூடாது. மூளை, குடல் பகுதி இரண்டும் ஆற்றலை அள்ளி விழுங்கக் கூடியவை என்பதால் இரண்டுமே ஒருவருக்கு பெரிதாக இருக்க சாத்தியமில்லை. 

சமையலால் சின்ன மூளையிலிருந்து பெரிய மூளைக்கு தாவும் பரிணாம வளர்ச்சி சாத்தியமானது.

No comments:

Post a Comment