Saturday, April 11, 2020

மூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 14

நான் படித்ததில் இருந்து...

அத் - 5, பக் - 23

சின்ன வயதில் எனக்கும் (நூலாசிரியர் வெ.இறையன்பு), என் நண்பனுக்கும் படிப்பு குறித்த சண்டை வந்தது. நான் அவனிடம், "உன்னை விட நான் மூளையை முழுவதுமாகப் பயன்படுத்துகிறேன்" என்று கோபமாகக் கூறினேன். 

அதற்கு அவன், "உண்மைதான். ஐந்து ரூபாய் இருப்பவன் அதை ஒரே நாளில் முழுவதுமாகச் செலவழிக்க முடியும். ஐம்பது லட்சம் இருப்பவனால் முடியுமா?" என்று கேட்டான். என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

மூளை இருப்பது என்றால் படிப்பதும், அதிக மதிப்பெண்கள் பெறுவதுமே என்று நாம் அதன் எல்லையைச் சுருக்கி விடுகிறோம். மூளையின் ஒவ்வொரு மூலையும் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்தவர்களே உணர்வார்கள்.

No comments:

Post a Comment