Wednesday, April 8, 2020

மூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 7

நான் படித்ததில் இருந்து...
அத் - 2, பக் - 13

ஒரு குரங்குப் பயிற்சியாளர் குரங்குகளிடம், "இன்றிலிருந்து உங்களுக்கு நான் காலையில் மூன்று செஸ்நட்டுகளும், மதியம் நான்கு செஸ்நட்டுகளும் தருகிறேன்" என்று சொன்னார். உடனை அவை அனைத்தும் கிளர்ச்சியில் இறங்கின. பயிற்சியைப் புறக்கணித்தன. 

அவர் உடனே, சரி! காலையில் நான்கும், மதியம் மூன்றும் தருகிறேன்" என்றார். உடனே அவை கிளர்ச்சியை விட்டு மகிழ்ச்சியில் குதித்தன. எப்படிப் பார்த்தாலும் எண்ணிக்கை ஒன்றே. ஆனால் உடனடியாக அதிகம் கிடைப்பதை உள்ளம் அதிகம் விரும்புகிறது.

மனிதர்களும் நாளைக்கு கிடைக்கும் பலாக்காயை விட இன்றைக்கு கிடைக்கும் கலாக்காயே மேல் என்று கருதித்தானே செயல்படுகிறார்கள்!

No comments:

Post a Comment