Thursday, April 23, 2020

தமிழ்ச்சரம் / புதிய வலைதிரட்டி

கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை தமிழ்மணம் என்ற வலைப்பூ பதிவு திரட்டி செயல்பட்டு
வந்தவரை ஓரளவு வலைப்பூ எனப்படும் Blogspot, Wordpress ஆகியவற்றில் எழுதப்படும்
பதிவுகளை இவற்றில் ஆர்வமுள்ளவர்கள் எளிதாக அடையாளம் கண்டு படிக்க முடிந்தது.
அது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டதும் வலைப்பூக்களுக்கு வாசகர்கள் வருகை குறைந்தது... இல்லை... இல்லை.... பல தளங்களுக்கு சுத்தமாக வருகையே இல்லாமல் போனதும் உண்மை.
அந்த குறைபாட்டை நீக்கும் முயற்சியில், தற்போது தமிழ்ச்சரம் என்ற வலைதிரட்டி சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது.



வலைப்பூக்களில் எழுதுபவர்களுக்கு இதில் ஒரு செளகர்யம் என்னவென்றால், முன்பு தமிழ் மணத்தில் பதிவுகளுக்கான இணைப்பை நாம் அதன் தளத்தில் உள்ளீடு செய்து இணைக்க வேண்டும்.
ஆனால் தமிழ்ச்சரத்தைப் பொறுத்தவரை ஒரு முறை உங்கள் வலைப்பூவை இணைத்து விட்டால் போதும்.... எப்போதெல்லாம் உங்கள் தளத்தில் புதிய இடுகை பதிவு செய்யப்படுகிறதோ.... அப்போதெல்லாம் தானாகவே தமிச்சரத்தில் அந்த இடுகையின் இணைப்பு இணைக்கப்பட்டு விடும்.
ஆர்வமிருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான எழுத்தாளர்களையும் பதிவுகளையும் அடையாளம் கண்டு கொள்ள தமிழ்ச்சரத்தை பயன்படுத்திப்பாருங்களேன்....
https://tamilcharam.com/
தற்போது தமிழ்ச்சரம் ஒரு கட்டுரைப்போட்டியை அறிவித்துள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கட்டுரைகளை உங்கள் வலைப்பூக்களில் வெளியிட்டு போட்டியில் கலந்து கொள்ளலாம்...
மேலும் விபரங்களுக்கு...
https://tamilcharamblog.blogspot.com/2020/03/blog-post_29.html

No comments:

Post a Comment