Tuesday, May 26, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 17

அத்தியாயம் - 17 - ரகசியமாய்... ரகசியமாய்...

  • நன்னீர் ஆதாரங்களைப் பாதுகாக்க ஹாங்காங் போன்ற நகரங்களில் கழிப்பிடங்களைத் தூய்மைப்படுத்த கடல்நீரே பெருமளவில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. நீரை மாசுபடுத்துதல் அதன் உபயோகத்தில் நடக்கும் தனிப்பெரும் தவறாகும்;  மாசானது மாசுபடுத்துவோருக்கு நன்மை பயப்பதாயிருந்தாலும் கூட நீரின் அனைத்து உபயோகங்களையும் தடுத்து, நீர்வளத்தை அழிக்கிறது. ஏனைய சுற்றுப்புறத் தூய்மைக் கேடுகளைப் போல இல்லாமல் வெளிபிரச்சனையாக மட்டுமே கருதப்படுகிறது. பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பாக கருதப்படுவதில்லை. மக்கள் இதனால் பாதிக்கப்படும்பொழுது, இத்தகைய மாசுபடுத்துதலுக்குக் காரணமான தனியார் நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதன் லாபத்தை நஷ்ட ஈடாக வழங்குவதில்லை.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

தேவிரஞ்சனியின் தந்தை, முத்துராஜ் என்ற அவள் காதலனின் பெயரையும் ஊரையும் சொன்னதை வைத்து நல்லதம்பியுடன் மறுநாள் அந்த ஊருக்கு சென்றான்.

அந்த பையன் காதலித்த பெண்ணுடன் ஓடியிருக்கிறான். ஆனால் அந்த பெண் யார் என்று அவனது குடும்பத்திற்கு அது வரை தெரியவில்லை. காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல் அவர்களாகவே தேடிக் கொண்டிருப்பதை அறிந்ததுமே அவர்களின் மோசமான உள்நோக்கத்தை அண்ணாமலை புரிந்து கொண்டான்.

அவனும் போனை வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்று விட்டதால் முரட்டுத்தனமாக சிந்திக்கும் குடும்பத்தினரால் எப்படி தேடினால் கிடைப்பார்கள் என்பது புரியாமல் வெளிப்பார்வைக்கு அமைதியாகவும், வெறிபிடித்து உள்ளுக்குள் வன்மத்தை வைத்துக் கொண்டு தேடினார்கள்.

சொக்கநாதன் ஒரு பிரபலமான நபர். அவரது உதவியாளர் தேவிரஞ்சனியை காணவில்லை. கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் அவரையும் கடத்தியிருக்கலாம் என்ற ரீதியில்தான் நாலைந்து நாட்கள் செய்தி வந்தது. அதற்கு அடுத்த நாட்களில் நாய் தினமும் குரைத்து துரத்தியதால் ஆத்திரம்: நாயை திம்சு கட்டையால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது என்பது மாதிரியான மற்ற செய்திகளுக்கு தாவி விட்டார்கள்.

அது தவிர, தேவிரஞ்சனி தன் காதலை மிக மிக ரகசியமாக வைத்திருந்தது போலவே, முத்துராஜும் வாயை மூடிக் கொண்டு இருந்திருக்கிறான். அதனால் முரட்டுத்தனமாக மட்டுமே யோசிக்க பழகிய முத்துராஜ் குடும்பத்தினர், உறவினர்களால் எதையும் அனுமானிக்க முடியவில்லை. 

இவர்கள் இப்படியே இருக்கும் வரை காதலர்களுக்கு ஆபத்து இருக்காது. ஆனால், வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் திருமணம் முடித்து குழந்தை பிறந்து பெரியவர்களாக வளர்ந்த பின்னர் கூட சாதி வெறியில் கொலை செய்த உண்மைச் சம்பவங்கள் ஏராளம் என்ற விபரம் நினைவுக்கு வரவே, அண்ணாமலையின் மனதில் ஒரு எண்ணம் எழுந்தது.

அதிகாலை நாலே முக்கால் மணிக்கே அண்ணாமலை தன்னுடைய தந்தையை அவர் மொபட்டில் கொண்டு வந்து விட சொல்லி இறங்கிய இடம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்.

திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் ஏகத்துக்கும் வரிசை கட்டி நிற்க, ஆங்காங்கே சிறு சிறு இடைவெளி கிடைத்த இடத்திற்குள் புகுந்து ஒரு பேருந்து ஊர்ந்து கொண்டிருந்தது. முழுவதும் பளிச்சென்ற வெண்மை நிற ஒளியைப் பாய்ச்சும் விளக்குகள். பேருந்தின் முகப்பில் திருப்பூர் : வழி திருவரம்பூர், திருச்சி, குளித்தலை, கரூர், காங்கேயம் என்று சிவப்பு நிறத்தில் எல்.இ.டி எழுத்துக்கள் பேரணி நடத்திக் கொண்டிருந்தன.

‘‘திருச்சீ... கரூர்... திருப்பூர்...’’ என்று நடத்துநர் சத்தமாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். நெற்றியில் மூன்று வரிகளாக பளிச்சென்ற விபூதி. அதன் மையத்தில் வட்டமாக சந்தனம் வைத்து, அதன் மேல் குங்குமம். இந்த ஒப்பனைக்கு அவர் அரை மணி நேரம் செலவிட்டிருக்கக் கூடும்.

தனியார் பேருந்துகளில் அதிகாலையில் இப்படி பளிச்சென்ற தோற்றத்துடன், ஊதுபத்தி, அம்மன் பாடல்கள்.. என்று பணியைத் தொடங்குவார்கள். இந்த அரசுப்பேருந்திலும் அப்படித்தான் இருந்தது.

அண்ணாமலையை பார்த்ததும், ‘‘வாங்க சார்... எங்க போகணும்...’’ என்றவரிடம் புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்து விட்டு, பேருந்திற்குள் நுழைந்தான். உள்ளே ஒரே ஒரு தம்பதியினர் மட்டும் அமர்ந்திருந்தார்கள். 

அண்ணாமலை ஓட்டுநருக்கு எதிரில் நடத்துநர் இருக்கைக்கு பின்னால் உள்ள இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கையில் சென்று அமர்ந்தான்.

ஐந்து மணிக்கு தஞ்சாவூரில் புறப்பட்ட பேருந்து கரூரில் காலை டிபனுக்காக கூடுதல் நேரம் நின்றது. திருப்பூர் பேருந்து நிலையத்தை அடைந்தபோது மணி 11.30.

பேருந்து நிலையத்திற்குள் நுழைந்ததுமே நடத்துநர் டைம் கீப்பரிடம் நேரத்தை பதிவு செய்ய சென்று விட, பேருந்து ஓரு ஓரமாக ஒதுங்கி நின்று விட்டது.

எல்லாரும் இறங்கும் வரை அண்ணாமலை அமைதியாக அமர்ந்திருந்தான். 

ஓட்டுநர், ‘‘சார்... இறங்கலியா...?’’என்று கேட்டார்.

‘‘விஜயகுமார்... உங்க கிட்ட பேசணுமே...!’’ என்று பெயர் சொல்லி அழைத்ததுமே அவர் முகத்தில் அதிர்ச்சி. குனிந்து தன் சட்டையைப் பார்த்தார். அவரது பெயரை உடனடியாக படிக்க முடியாத கோணத்தில், அந்த பேட்ஜ் கவிழ்ந்திருந்தது. 

பின்பு எதைப் பார்த்து தன் பெயரை சரியாக அழைத்திருப்பார் என்ற கேள்விக்குறியுடன் அண்ணாமலையை பார்த்தார்.

‘‘உங்க மூலமா நான் தேவிரஞ்சனியை பார்க்கத்தான் வந்துருக்கேன்...’’ என்றதும் விஜயகுமார் முகத்தில் மட்டுமின்றி உடல் முழுவதும் வியர்த்து விட்டது.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

No comments:

Post a Comment