Friday, May 1, 2020

ஜனனி ஜனனி... ஜகம் நீ... அகம் நீ...

இளையராஜா இசையில் எவ்வளவோ மனதை வருடும் பாடல்கள் இருந்தாலும் கவிஞர் வாலி எழுதி தாய் மூகாம்பிகை திரைப்படத்தில் இடம் பெற்ற ஜனனி ஜனனி பாடல் முதலில் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது.
எனக்கு 12 அல்லது 13 வயது இருக்கும். அதாவது 1993 அல்லது 1994 வாக்கில் தெருவில் வேறு யாரோ ஒருவர் வீட்டில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில் சன் மியூசிக் சானலில் இந்த பாடலைப் பார்க்கிறேன்.

அந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததை ஏன் என்று சொல்லத் தெரியவில்லை.

1995 ஆம் ஆண்டு வாக்கில் திருவாரூரில் அப்போது இயங்கி வந்த பேபி டாக்கீசில் "தாய் மூகாம்பிகை திரைப்படம் திரையிடப்பட்டபோது இந்த பாடலுக்காகவே சென்று படம் பார்த்தேன்.

எஸ்.பி பாலசுப்பிரமணியனுக்கு ஹரஹர சிவனே அருணாச்சலனே அண்ணாமலையே போற்றி...

கே.ஜே.ஜேசுதாசுக்கு ஹரிஹராசனம்....
அந்த வரிசையில் இளையராஜாவுக்கு காலத்தால் அழியாத என்றும் மனம் கவரும் பாடலாக இந்த ஜனனி ஜனனி பாடலைக்கருதுகிறேன்.


No comments:

Post a Comment