Thursday, July 16, 2020

ஆடிப்பட்டம்

ஆடிப்பட்டம் தேடிப்பார்த்து விதைக்கணும் கண்ணையா...


1993 ஆம் ஆண்டு வெளியான பொன்னுமணி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது இந்த பாடல்.


பசுமைப்புரட்சியில் தொடங்கி விவசாயத்திலும் பல்வேறு நுட்பங்கள் புகுத்தப்பட்டதன் காரணமாகவும் வேறு பல வசதிகள் காரணமாகவும் சில காய்கறிகள், பழங்கள் ஆண்டு முழுவதும் கிடைக்கின்றன.
ஆனால், தமிழகத்தில் வேளாண்மையைப் பொறுத்தவரை ஆடிமாதம் என்பது முக்கியமாக கருதப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த பாடலில் இடம்பெற்ற

விதை போடணும்... போடணும்....
உலகே பசி ஆறணும் ஆறணும்...

என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை.

கடந்த சில ஆண்டுகளாகவே பொதுமக்களில் பலரும் வேளாண்மையைப் பற்றியும் உணவு உற்பத்தியைப் பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்து நன்றாகவே புரிந்து கொண்டுள்ளார்கள்.

கையில் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் உண்ண உணவு தானியங்களும் மிக அவசியம் என்பதை நன்றாக புரிந்து கொண்டுள்ளோம்.

தற்போது ஏற்பட்டுள்ள ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலை காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உணவு தானியங்களின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறைக்கு மிகவும் நன்றாகவே உணர்த்தி விட்டது என்று நினைக்கிறேன்.


No comments:

Post a Comment